J/75 சுண்டிக்குளி தெற்கு பிரிவின் கிராமிய பொருளாதார புத்தெழுச்சி குழுவின் கார்த்திகை மாத செயற்பாடாக மரக் கன்று விநியோகம் Lions club of Nallur North golden star ன் அனுசரணையுடன் 20/11/2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.இதில் Lions club of Nallur North golden star இன் பிரதிநிதிகளும் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாநகரசபை உறுப்பினர், மாதர்சங்க பிரதிநிதிகள், சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.ஒரு பயனாளிக்கு 10 கத்தரி, 10 கறிமிளகாய், 10 மிளகாய், 10 தக்காளி, 1 மஞ்சள், 1 பலா, 1 தென்னை போன்ற கன்றுகள் வீதம் 35 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.vegetable plants.jpg1

J/75 சுண்டிக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் நாட்டின்75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இன்று 2022-11-23 புதன்கிழமை சென் சாள்ஸ் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. இதில் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், மாநகர சபை உறுப்பினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

free1

பால்நிலை வன்முறைக்கெதிரான செயற்குழு உறுப்பினர்களுக்குரிய மூன்றுநாள் பயிற்சிப் பட்டறை எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்று 18.11.2022 வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளது.முதலாம் நாள் செயலமர்வில், போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பற்றி வளவாளர் திரு.பிறேம் அவர்களும் ,இரண்டாம் நாள் செயலமர்வில் இளவயது கர்ப்பம் ,பால்நிலை வன்முறைகள் இடம்பெறும் வடிவங்கள்,அப் பிரச்சனைகளுக்கு அணுக வேண்டிய சேவை நிலையங்கள் தொடர்பாக வளவாளர் Dr.குருபரன் மகப்பேற்று வைத்தியர் யாழ்.போதனா வைத்தியசாலை அவர்களும், மூன்றாம் நாள் செயலமர்வில் பால்நிலை வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றி வளவாளர் புராதனி விரிவுரையாளர்,சட்டத்துறை,யாழ் பல்கலைக்கழகம் அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

wdo1

J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் 22.11.2022 பி.ப 3.00 மணியளவில் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

women.jpg 3

சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவினரால் "ஆயுள்வேத பாதுகாப்புச் சபைகளின் வலுவூட்டல் மற்றும் விழிப்புணர்வுக்கான தேசிய வேலைத்திட்டம்" (வடமாகாணம் ) தொடர்பான கலந்துரையாடல் 19.11.2022 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் திரு.சந்தன நிலகரண (மேலதிக செயலாளர் ,சுதேச வைத்தியர் பிரிவு ,அபிவிருத்தி) அவர்களும், திரு.பொ.தயானந்தன் (பணிப்பாளர் ,சுதேச வைத்தியர் பிரிவு,அபிவிருத்தி) அவர்களும் .திரு.சமல் கேனுவர(உதவிப் பணிப்பாளர்,அபிவிருத்தி) அவர்களும் , திருமதி.ஜெபநாம கணேசன் ( மாகாண ஆயுள்வேத ஆணையாளர் ,வடமாகாணம்) அவர்களும்,MDr. சிவகுமார் (ஆயுள்வேத போதனா வைத்தியசாலையின் வைத்தியர்), அவர்களும் திரு.P. திசாநாயக்கா (பதிவாளர் ஆயுள்வேத வைத்தியசாலை) அவர்களும்,
சுதேச வைத்திய அதிகாரிகள் ,மருத்துவர்கள், சுதேச வைத்திய அமைச்சின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சுதேச மருத்துவ பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.சுதேச வைத்தியம் தொடர்பான நூல்களும் இங்கு வழங்கப்பட்டன.
0011
Scroll To Top