75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 2022.11.26 "கிராமிய புத்தெழுச்சி மையத்தின் ஏற்பாட்டில் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தினால் பத்து வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கு மரவள்ளித்தடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாநகரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் புத்தெழுச்சி மையத்தின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டார்கள்.

862

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு J/66 ஈச்சமோட்டை கிராம அலுவலர் பிரிவில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் 25.11.2022 தினம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் சிரமதானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மரம் நடுகையும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
66 free.jpg 1
நாட்டின் 75 வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு J/68 றெக்கிளமேசன் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 2022.11.25 "கிராமிய புத்தெழுச்சி மைய" அங்கத்தவர்களினால் குருநகர் வைத்தியசாலை வளாகம்,குருநகர் கடற்கரையோரம்,தொடர்மாடி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
சென் கிறிஸ்தோப்பர் சாரண அமைப்பினரால் மரக்கன்றுகள்,பாதுகாப்புக்கூடு என்பன இந் நிகழ்வுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் நிகழ்வில் அவர்களும் கலந்துகொண்டனர்.
64

75வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆயுர்வேத பணிமணையுடன் இணைந்து J/74 யாழ் நகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள முதியோர் சங்க நிதி அனுசரனையில் , அக் கிராமத்திற்கான பொருளாதார புத்தெழுச்சி மையத்தின் ஏற்பாட்டில், அங்குள்ள முதியோருக்கான மருத்துவ முகாம் 25.11.2022 அன்றுஇடம்பெற்றது.

74 medi

Scroll To Top