

எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடல்நீரேரிப் பகுதிகளில் கடலட்டை மற்றும் கொடுவா மீன் வளர்ப்புப் பண்ணைகள் அமைத்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களில் மாகாணக்காணி ஆணையாளரின் (வடக்கு காகாணம்) அனுமதி கிடைக்கப் பெற்றவர்களுக்கு பண்ணை அமைந்துள்ள அரச காணிகளிற்கான வருடாந்த அனுமதிப்பத்திம் 19.10.2022 நேற்று பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலே தொடர்ச்சியாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள்,குடும்பநல உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள்,கிராமங்களிலுள்ள டெங்குக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் சென்று டெங்கு நோய் தொடர்பாக விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.








