வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (25.11.2024) யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மழை வெள்ள அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், நிவாரண உதவிகள் தொடர்பாகவும், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், அதனால் வரும் பாதிப்புக்கள், மக்களின் பாதுகாப்பு, தங்க வைக்கும் இடங்கள் தொடர்பான விடயங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன. பிரதேச செயலாளர் திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், சம்மந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 
25.11.2024
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு இன்று 30.05.2024 யா/கதீஜா மகா வித்தியாலயத்தில் சிரமதானம் இடம்பெற்றது. பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இப் பணியில் பங்குபற்றியிருந்தனர்.
1
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Work -Life Balance தொடர்பான பயிற்சி நெறி ஒன்று 22..05.2024 காலை 9.00 மணி 12.15 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இப் பயிற்சி நெறியின் வளவாளராக Dr.K. கஜவிந்தன் (சிரேஸ்ட விரிவுரையாளர்மெய்யியல் துறை, கலைப்பீடம்,பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு பயன் மிக்க கருத்துக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவு படுத்தியிருந்தார்.
2

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாண பிரதேச வெசாக் விழா-2024! யாழ்ப்பாண பிரதேச சம்மேளனம் மற்றும் எமது பிரதேச செயலகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இரு நாட்களைக் கொண்ட வெசாக் வேலைத்திட்டங்கள் பிரதேச மட்டத்தில் இடம்பெற்று நேற்றைய தினம் நிறைவு பெற்றன.

30

J/62 கிராம அலுவலர் பிரிவிலுள்ள "புனித வளனார்" முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற மருத்துவ முகாம் மற்றும் தொற்றா நோய் பரவாது தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் 17.05.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் சமூக மருத்துவ உத்தியோகத்தர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
1
Scroll To Top