காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்,மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகம் யாழ்ப்பாணத்தினால் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதிய சோனகதெரு கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான காணிப் பயன்பாட்டுத்திட்டம் தொடர்பான நூல் தயாரிக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் நேற்று அக்கிராம அலுவலர் பிரிவின் கிராம உத்தியோகத்திரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

முதியோருக்கான தேசிய செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "திரிய பியச" வீடமைப்பு திட்டத்தின் கீழ் J/74, யாழ்நகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு 2022/11/02 நேற்று சுபநேரத்தில்எமது பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அப் பிரிவிற்குரிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,வணக்கத்திற்குரிய மதகுரு , பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் , மற்றும் கிராமிய முதியோர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

"வனிதாபிமான" வடக்கின் சிறந்த பெண் உற்பத்தி முயற்சியாளருக்கான விருது" 2022 இல் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் ச.பிரியதர்ஷினி அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வடக்கின் சிறந்த பெண் உற்பத்தி முயற்சியாளருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.அவரை எமது பிரதேச செயலகத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.










