எமது பிரதேச செயலக ஒழுங்குபடுத்துதலின் கீழ் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள பொதுமக்களிற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் ஒன்று மத்திய வங்கியின் அனுசரணையுடன் 12.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.இம் முகாமில் யாழ்.போதனா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரிகள்,தாதியர்கள்,மருந்தாளர்கள்,மத்திய வங்கியின் உத்தியோகத்தர்கள் ,கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,அப்பகுதியின் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.இம் முகாம் பொதுமக்களுக்கான பயன்வாய்ந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மரநடுகை வாரத்தையொட்டி J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் 2022-11-10 அன்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் அப்பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உட்பட மீனாட்சி மாதர் சங்க உறுப்பினர்களும் , Forest department அலுவலரும், மீனாட்சி முன்பள்ளி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

- யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.








