"நங்வமு லங்கா" திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் ,தெரிவு செய்யப்பட்ட ஐந்து சுயதொழில் முயற்சியாளர்களுக்குரிய உபகரணங்கள் 23.11.2022 புதன்கிழமை தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினரின் (NEDA) ஒழுங்குபடுத்துதலின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

livelyhood

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 சிறுவர் முன்பள்ளிகளுக்கு உலக வங்கியின் அனுசரணையுடன் 22.11.2022 அன்று குடிநீர் சுத்திகரிக்கும் Water Filterகள் வழங்கி வைக்கப்பட்டன.
livelyhood.jpg 5

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு J/74கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான போதைபொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான உளவளத்துணை வழிகாட்டல் செயலமர்வு 2022/11/23 தொடர்பகத்தில் நடைபெற்றது.நிகழ்வில் அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் வளவாளர்கள் கலந்துகொண்டனர்.
74 free3
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு J/72 சின்னக்கடை கிராம அலுவலர் அலுவலகத்தில் 23.11.2022 புதன்கிழமை இடம்பெற்றதுடன் காலை 10.00 மணிக்கு J/61 கிராம அலுவலர் பிரிவிலுள்ள அம்பலவாணர் முன்பள்ளியில் பழமரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
 
 
75 free
 
 
 
fre tree

J/61 நெடுங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மத்திய வங்கியின் அனுசரணையுடன் வசந்தபுரம் முன்பள்ளியில் கல்விபயிலும் மாணவர்களுக்கு கற்றலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் திண்மக்கழிவகற்றலை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பாக மாநகரசபையின் விடயத்திற்கு பொறுப்பான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரால் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

wastage

Scroll To Top