J/83 கொட்டடி கிராம அலுவலர் அலுவலகத்தில் 10.03.2024 அன்று செந்தில் கதிர்வேலாயுதசுவாமி அறநெறிப்பாடசாலையில் கடந்த ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சமயம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வும்,அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சத்துணவை வழங்கிவரும் மூன்று சமூக சேவையாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.இதில் கிராம அலுவலர்,இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


"பாரம்பரிய விவசாய கலாசார மரபினுடாக ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்குதல்" எனும் தலைப்பில் யாழ்ப்பாண புனித மாட்டீன் சிறிய குரு மட மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 04.03.2024 பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வின் வளவாளராக திருநெல்வேலி விவசாய பாடசாலையின் போதனாசிரியர் திரு.எஸ்.கிரிதரன் மற்றும் பிரதேச ,மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.


பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமது அலுவலக உத்தியோகத்தர்களால் 28.02.2024 புதன்கிழமை யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வச் செயலமர்வு ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.






