இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படையினரும் விவசாயத் திணைக்களமும் இணைந்து சுதேச மருத்துவத் திணைக்களத்தினூடாக,எமது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கும், பாடசாலைகள், திணைக்களங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் தென்னை,பலா,கொய்யா,எலுமிச்சை,வேம்பு,மாதுளை, இலுப்பை,சீதா உள்ளடங்கலான 1000 பயன்மிகு மரக்கன்றுகளை 25.03.2024 அன்று வழங்கி வைத்தனர்.
tree issue
J/66 ஈச்சமோட்டை ,J/82 வண்ணார்பண்ணை,கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கங்களின் பொது கூட்டமும் நிர்வாக தெரிவும் கடந்த வாரம் இடம் பெற்றது. நிகழ்வுகளில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள் , சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
15
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் மாதாந்த விற்பனைச் சந்தை அலுவலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு இன்று அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
Local market 5
 
இவ்வருடத்திற்கான காலாண்டுக்குரிய பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலாளர் தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் சமகாலச் சூழலில் சிறுவர் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. பாடசாலை அதிபர்கள்,கிராம அலுவலர்கள்,சுகாதார திணைக்கள அதிகாரிகள்,கல்வித் திணைக்கள அதிகாரிகள்,அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள்,சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் எனப் பலர் இக் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
6
J/84,J/85 நாவந்துறை வடக்கு,தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் கியூடெக் கரிதாஸ்நிறுவனத்தின் ஏற்பாட்டில் 22.03.2024 அன்று உலகநீர் தினத்தையொட்டிய நிகழ்வாக விழிப்புணர்வுப் பேரணி, மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு என்பன இடம்பெற்றன.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
1
Scroll To Top