போதைப் பொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகளான உளவளத்துனை,சிகிச்சை,புனர்வாழ்வு போன்ற விபரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு உடனடியாக அழைக்க வேண்டிய இலவச அழைப்புக்குரிய இலக்க காட்சிபடுத்தல் பலகை இன்று எமது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட J/88 ஆறுகால்மட கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பொம்மைவெளி இளநிலா சனசமூக நிலையத்திற்கு முன்னால் காட்சிபடுத்தப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பிரதேச செயலக த்தினால் அழகிய சிறுவர் சமூகத்தின் சிறுவர்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரன் அவர்களால் தொகுக்கப்பட்ட கிராமிய விளையாட்டு நூல் வெயீட்டு நிகழ்வும் உதவி பிரதேச செயலாளர்திருமதி சோபிகா றோய்றொபின்சன் தலைமையில் கொழும்பு த்துறை துரையப்பா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.கிருஸ்ணகுமார் ,பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள், மாணவர்கள்,பொது அமைப்பின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.கிராமிய விளையாட்டுகள் பல ஒழுங்கு படுத்தப்பட்டு சிறுவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.



யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினால் "சாராஸ்ரீலங்கா" உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக 30.05.2022 திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை எமது பிரதேச செயலக வளாகத்தில் உணவுப்பயிர் நாற்றுகள்,விதை உள்ளீடுகள்,திரவவகையிலான இயற்கைப் பசளைகள்,பொதி செய்யப்பட்ட இயற்கைப் பசளைகள் என்பவற்றை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.இப் பயன்தரு ஒழுங்கமைப்பில் ஆர்வத்துடன் பலர் பயன்பெற்றிருந்தனர்.









