தற்போது உலகெங்கிலும் அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல் (Monkey pox) பற்றிய விழிப்புணர்வு....
உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் இன்னும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் வெவ்வேறு நாடுகளில் உள்ள மேலும் 50 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.
முன்னதாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய பரவலின்போது ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் உறுதியானது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொலைதூர பகுதிகளில் குரங்கம்மை பாதிப்பு மிகவும் சாதாரணமானது. குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிகவும் அரிதானது.
உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான தொற்று அபாயங்கள் குறித்த மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு குரங்குக் காய்ச்சல் தொடர்பான அவசர கூட்டத்தைக் கூட்டவுள்ளது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது.
சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த நோய் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. இதையடுத்து இந்த அவசரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவான நிலையில், உலக சுகாதார நிறுவனம் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்டு, விரைவாக பரவி வரும் குரங்கு நோய் குறித்து விவாதிக்கப்படும்.
இந்த நோய் ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பொதுவாக ஏற்படும் நோய். ஐரோப்பாவில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்குக் காய்ச்சல் இருப்பதாக கருதப்பட்டாலும், அவை அனைவருக்கும் உறுதிபடுத்தப்படவில்லை.
ஐரோப்பாவில், ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் என ஒன்பது நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான (STAG-IH) தொற்று அபாயங்கள் குறித்த மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்த சிக்கலை விவாதிக்கும்.
விமான நிலையம் மற்றும் துறைமுக சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
"குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணித்தவர்களின் மருத்தவ தகவல்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட பயணிகள் யாராக இருந்தாலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
குரங்கு காய்ச்சல் என்பது, குரங்கு அம்மையை ஏற்படுத்தும் வைரஸ்களின் குடும்பத்தில் இருந்து வருகிறது. குரங்குக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவதும் சாத்தியமாகும், ஆனால் அது நோய் வெளிப்பட்ட நாளிலிருந்து 4 நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.
குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?
குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.
மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.
இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.
காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.
14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.
எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
குரங்கம்மை வைரஸ் எப்படி பரவும்?
ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும்.
குரங்கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை. ஆனால் இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.
நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.
இந் நோய் குறித்து நாமும் விழிப்புணர்வுடன் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வருமுன் காப்போராக இருப்போம்.








