பொது மக்களுக்கான அறிவுறுத்தல்.........
எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்வதற்காக தாங்கள் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்..........
01. குடும்ப அட்டை
02. வாகனப் புத்தகம்
03. இவ்வருட வாகன வரி அனுமதிப் பத்திரம்( Tax)
04. இவ்வருடத்துக்கான வாகனக் காப்புறுதி அனுமதிப் பத்திரம்(Insurance)
05. தேசிய அடையாள அட்டை
எரிபொருள் அட்டை வழங்கப்படுவதற்கான நிபந்தனைகள்!!!
01. வாகனம் பாவனையில் இருத்தல் வேண்டும்.
02. ஒரு வாகனத்திற்கு ஒரு அட்டை மட்டும் வழங்கப்படும்.
03. வாகன உரிமையாளர் பெயரில் மட்டும் அட்டை வழங்கப்படும்.
04.பெயர் மாற்றங்களை உடன் செய்து கொள்ளவும்.
05. யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசாங்க நிறுவனங்கள் , கூட்டுதாபனங்கள், திணைக்களங்கள், தனியார் வங்கிகள், போன்றவர்களுக்கு அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களால் எரிபொருள் அட்டை வழங்கப்படும்.
06. மேற்குறிப்பிட்ட பகுதியினர் தவிர்ந்த அனைத்து பொது மக்களுக்கும் கிராம அலுவலர் பிரிவுகளில் வழங்கப்படும்.
07. உரிய நபர் நேரில் வருகை தர வேண்டும்.
08. எரிபொருள் அட்டை தொலைந்தால் மீண்டும் வழங்கப்பட மாட்டாது.
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்,
யாழ்ப்பாணம்.

2021 ஆம் ஆண்டிற்கான சனத்தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நாணயக்குற்றி எமது பிரதேச செயலாளர் அவர்களுக்கு புள்ளிவிபர உத்தியோகத்தரினால் இன்று 27.06.2022 வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஜூலை முதலாம் திகதி முதல் மீளவும் ஆரம்பம்.
Jaffna International Airport is to be reopened for operations from July 1 onwards.
கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
Hon. Nimal Siripala de Silva, M.P.
Minister of Ports, Shipping and Aviation

அலுவலக உத்தியோகத்தர்கள் மட்டத்திலிருந்து வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலக வளாகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களால் கொண்டுவரப்படும் மரக்கறி விதை நாற்றுக்கள் ,மரக்கறிக் கன்றுகள் ,இயற்கைமுறையில் தயார் செய்யப்பட்ட கூட்டுப் பசளைக் கரைசல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இன்றைய தினமும் ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உள்ளீட்டுப் பொருட்களை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.இரு சாராரும் பயன்பெறும் வகையில் தொடர்ச்சியாக இச்செயற்பாடு கிராம மட்டங்களிலும் ஊக்குவிக்கப்படும்.


தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விண்ணப்பங்களும் அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பதிவிறக்கம் செய்வதற்கு
Applications and the relevant instructions including procedures to admit students to grade one of the government schools in 2023 have been issued.
For Download










