B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம அலுவலர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் மறு அறிவித்தல் வரை எமது அலுவலக பதிவகக்கிளையால் வழங்கப்படும் பிறப்பு , இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் திங்கள்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் பொதுமக்களாகிய உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு நாம் மனம் வருந்துகின்றோம்.

இன்று முதல் 11.08.2022, 12.08.2022 வரை முத்திரைச் சந்தி, நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில்
காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 8.00 மணி வரை உள்ளுர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இக் கண்காட்சியில் எமது பிரதேசத்தைச் சார்ந்த உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக காத்திருக்கின்றனர்.இயன்றளவு அவர்களின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளருக்கு பொலீசாரால் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று 08.08.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு அடையாளத்தினை வெளிப்படுத்தினர்.இதில் எமது பிரதேச செயலாளர்,உதவிப் பிரதேச செயலாளர்,
கணக்காளர்,உதவித் திட்டமிடல் பணிப்பளர்,நிர்வாக உத்தியோகத்தர்,மேலதிக மாவட்டப் பதிவாளர்,சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும்
கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அலுவலகஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.கண்டனப் பதாகைகளை தாங்கிய வண்ணம் உத்தியோகத்தர்கள் தமது எதிர்ப்பை இங்கு வெளிப்படுத்தியிருந்தினர்.










