எமது யாழ்ப்பாண பிரதேச செயலக உழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 20.12.2023 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு ஒளிவிழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

2023 டிசம்பர் 18ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023டிசம்பர் 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.








