சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 08.01.2024 திங்கட்கிழமை விசேட நுளம்புக் கட்டுப்பாட்டுவார சிரமதான நிகழ்வு J/84 நாவாந்துறை கிராம அலுவலர் பிரிவுகளில் எமது உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி உபகரணங்கள் நலன்விரும்பி ஒருவரால் 04.01.2023 அன்று எமது பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

டெங்கு தொடர்பான விசேட வேலைத்திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தில் வேகமாகப் பரவும் டெங்கு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கள உத்தியோகத்தர்கள் களப்பணிகளில் 03.01.2023 இன்று ஈடுபட்டனர்.

Dengue control meeting was held on 29.12.2023 at 9.00 am in our Divisional Secretariat Jaffna.Grama Niladharies And needed Divisional level officers to participated in the Meeting.

வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற தொனிப் பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாட்டை ஆரம்பிக்கும் முதல் நாள் இன்று காலை 9.00 மணிக்கு எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் தேசியக் கொடியேற்றல்,தேசிய கீதம் பாடுதல் ,மௌன அஞ்சலி செலுத்தல்,அரச சேவை உறுதியுரை எடுத்தல் என்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்களின் கீழ் வறுமை ஒழிப்பு ,வேலையின்மையைக் குறைத்தல் ,உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் அந்நியச் செலாவணி உழைப்பு அதிகரித்தல் என்பவற்றுக்காக அரச சேவையிலுள்ள அனைவரினதும் செயலூக்கமான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தி பொது மக்களுக்கான சேவை வழங்கலின் வினைத்திறன் உறுதிப்படுத்தப்படுகின்ற அத்தியாவசியமான மறுசீரமைப்புகளை அரச சேவையில் அறிமுகப்படுத்தி ,அரச செலவுகளைக் குறைத்தல் மற்றும் அரச வருமானத்தை அதிகரித்தலின் மீது நீங்கள் அனைவரும் முன்னரைவிடக் கவனம் செலுத்துதல் என்ற சத்தியப்பிரமாண வலியுறுத்தலுடன் எமது இவ்வருடத்திற்கான கடமைகள் ஆரம்பித்தன.\








