பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள் ,தொழில் தேடுவோர்களிற்கு பயன் உடையதான சிங்களம் 100 மணித்தியால சான்றிதழ் கற்கைநெறியானது எதிர்வரும் சனிக்கிழமை 21-05-2022 புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாக உள்ளது. ௭ண்ணிக்கை 50 என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமைப் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர் .
கற்கை நெறிக்கு இணைய விரும்பியவர்கள் எமது அலுவலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.முத்துரூபன்(0777350100) தொடர்பு கொள்ளவும்.

வண்ணார் பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் தரம் 9 மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது. வளவாளராக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .க.பிருந்தாபன் கலந்துகொண்டு போதைப் பொருட்கள் மாணவர்களிடத்தில் ஊடுருவும் வழிகள்,அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல், உள பாதிப்புகள்,கற்றல் செயற்பாட்டில் பின்தங்கும் நிலை,அந்நிலையை எவ்வாறு தடுத்து நிறுத்தி தொடர்ந்து கற்றலில் ஈடுபடுதல் என்பன பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினார்.


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ள உள்ள பொது மக்களுக்கான அறிவுறுத்தல்..........
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இடை நிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சாதாரண சேவையின் கீழ் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) மாத்திரம் மே மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மே மாதம் 9ஆம் திகதி திங்கட்கிழமை, மே மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்ட,
மற்றும் மே மாதம் 05 ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு வருகைத்தந்த, திணைக்களத்தினால் இலக்கம் அல்லது திகதி முத்திரையைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், மே மாதம் 10 ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை
ஒப்படைப்பதற்கு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
http://www.immigration.gov.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசித்து அல்லது 0707101060 எனும் தொலைப்பேசி இலக்கத்தை அழைத்து திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும்.
திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள், பிராந்திய அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுச் சேவைகள் என்பன வழமை போன்று நடைபெறும்.

அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இப்போது தங்கள் வசம் உள்ள பொருட்களுக்கான பில், விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார சபை (CAA) அறிவித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 27 முதல் உடன் அமுலுக்கு வந்துள்ளது.
விலைப்பட்டியல் (Bills) விநியோகிஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, வாங்கிய திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஏதேனும் குறிப்பிட வேண்டும்.
நுகர்வோர் விவகார சபை.

J/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவின் பிரிவின் கிராம அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4 மணியளவில் நடைபெற்றது.கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுமக்கள் கலந்துகொண்டு சங்கத்திற்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தனர்.








