முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றின் தேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக,
நடமாடும் எரிபொருள் முறை பயன்படுத்தப்படும்.
இந்த முறை மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி பைக்குகள் மற்றும் கான்களுக்கான தேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக இது பயன்படுத்தப்படும்.
எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்த வெளிகளில் இது பயன்படுத்தப்படும்.
இதை விரைவில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவோம் என நம்புகின்றேன் என
கௌரவ எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலைகள்
பற்றிய விபரங்கள்.
Petrol 92 Octane - Rs. 450/-
Petrol 95 Octane - Rs. 540/-
Diesel - Rs. 440/-
Super Diesel - Rs. 510/-
புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று CPC தெரிவித்துள்ளது.
Fuel price has been reduced in Sri Lanka from 10 PM tonight.
New Prices
Petrol 92 Octane - Rs. 450/-
Petrol 95 Octane - Rs. 540/-
Diesel - Rs. 440/-
Super Diesel - Rs. 510/-
CPC says fuel will be supplied from 21st July according to the new fuel pass system.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்கு..
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர முறையின் QR Code பற்றி நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்,
பற்றிய ஒரு சிறு தொகுப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இது வாகன பயனாளர்கள் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும்போது ஏற்படும் தவறுகளை சீர் செய்யும் என நாம் நம்புகின்றோம்.
சகல வாகன பயனாளர்களின் நன்மை கருதி PDF வடிவில் இந்த சிறிய ஆவணம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்வதற்கு
Note:-
குறிப்பிட்ட இந்த பயனுள்ள ஆவணத்தை உங்கள் WhatsApp இலக்கத்திற்கு பெற்றுக் கொள்ள விரும்பும் வாகன பயனாளர்கள்
QR என ரைப் செய்து உங்களுடைய WhatsApp இலக்கத்தில் இருந்து +94212241726 என்ற எமது WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று register என்பதை கிளிக் செய்து உங்களுடைய சரியான விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய விபரங்களை உறுதிப்படுத்த உங்களுடைய தொலைபேசி இலக்க
உறுதிப்படுத்தப்படும்.(OTP Code)
உறுதிப்படுத்தப்படும்.(OTP Code)உங்கள் பதிவு வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பின் Logout என்பதை கிளிக் செய்து வெளியேற முடியும்.
மீண்டும் உங்கள் விபரங்களை பார்வையிட Login என்பதை கிளிக் செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்து செய்து பார்வையிட முடியும்.
ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் பதிவு செய்யப்படும்.
வாகன Chassis இலக்கம் மற்றும் ஏனைய விபரங்களை உறுதிப்படுத்த QR இலக்கம் ஒன்று ஒதுக்கப்படும்.
வாகனத்தின் கடைசி இரண்டு இலக்கங்களைப் பயன்படுத்தி வாரத்தின் இரண்டு நாட்கள் எரிபொருள் பெற்றுக் கொள்ள ஒதுக்கப்படும்.
அதற்கமைய,
01)வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
02)ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள்.
03)வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும்.
04)வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம்
உங்களுடைய சரியான விபரங்களை பதிவு செய்த பின்பு " Registration Successful" என திரையில் தோன்றும்.
அதில் உங்களுக்குரிய QR இலக்கம் மற்றும் வாராந்த ஒதுக்கீடு மற்றும் மிகுதி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
Note:-நீங்கள் உள்ளீடு செய்த வாகன இலக்கமும் அடிச் சட்ட இலக்கமும்(Chassis) சரியானது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பே பதிவு செய்ய அனுமதிக்கும்.
தவறான விபரங்களை உள்ளீடு செய்தால் பதிவு செய்ய அனுமதிக்காது.
தயவு செய்து உங்களது மோட்டார் வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் உள்ளது போன்று சரியான விபரங்களை உள்ளீடு செய்யுங்கள்.
Note:-உங்களுடைய எரிபொருள் மிகுதியை அறிந்து கொள்ள FUEL BAL இடைவெளி உங்கள் வாகன இலக்கத்தை ரைப் செய்து 0766220000 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.
உதாரணம் உங்கள் வாகன இலக்கம் XH 3000 எனின் FUEL BAL XH 3000 என ரைப் செய்து 0766220000 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணையதளம் (bit.ly/3nPMFvJ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோ, இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும். எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும். பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த எரிபொருள் கோரிக்கைக்கான இணையதளத்தினை மாவட்டத்செயலக இணையதளத்தின் ஊடாகவும் அணுகமுடியும்.







