யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் யாழ் மாவட்டத்தில் கட்டிளம்பருவத்தினரிடையே பாலியல் மற்றும் இனவிருத்திச்சுகாதார உரிமைகளை மேம்படுத்தல் திட்டத்தின் சமுதாய மட்ட முதற்கட்டமாக J/81 கோட்டை கிராம சேவையாளர் பிரிவின் கிராமத்தில் திட்டம் தொடர்பான அறிமுகப்படுத்தல் மற்றும் கிராமிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023-04-30 அன்று கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் J/81 கிராம சேவையாளர் அவர்களும் SRHR பயிற்சி இலகுபடுத்துனர் திரு. தெ.சந்திரகுமார் மற்றும் மாதர் சங்க,சனசமூக நிலைய,விளையாட்டுக்கழக,இளைஞர் கழக நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பல்வேறு சமூக மட்ட அமைப்பினர் கூட்டுப்பொறுப்பு மற்றும் கூட்டுப்பிரக்ஞையுடன் பங்குபற்றியிருந்தனர்.


கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் "மாண்புறு மாணவ சமுதாயம்" எனும் கருப்பொருளில் ஆளுமை மிக்க மாணவர் சமூகத்தினை உருவாக்கும் திறன் விருத்திப் போட்டிகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி இன்று 28.04.2023 எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 27.04.2023 நேற்றைய தினம் அக் கிராமத்தின் டெங்கு குழுவினருக்ககான டெங்கு தொடர்பான கலந்துரையாடல் கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம் பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

J/84 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று 26.04.2023 காலை 10.00 மணிக்கு மலேரியா கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் யாழ், கொழும்பு வைத்திய அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.







