2023 பெப்ரவரி01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்படுகின்ற தாழமுக்கம் நேற்றுஇரவுவடஅகலாங்கு 8.40 N இற்கும்கிழக்குநெடுங்கோடு 82.90 E இற்கும்அருகில் திருகோணமலைக்குகிழக்காக180 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது.
அதுமேற்கு - தென்மேற்குத் திசையில் நகர்ந்துஇன்று 2023 பெப்ரவரி 01ஆம் திகதி காலைஇலங்கையின் கரையை அடையக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின்பெரும்பாலானபிரதேசங்களில்மேகமூட்டமானவானம்காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு,வடமத்திய, வடமேல் மற்றும்கிழக்கு மாகாணங்களில் சிலஇடங்களில் 150 மி.மீஅளவானமிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு,வடமத்திய, கிழக்கு,வடமேல்மற்றும்மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
label
J/62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 2023-01-15 ஞாயிற்றுக் கிழமை அன்று மக்களின் பங்குபற்றுதலுடன் பொங்கல் விழா நடைபெற்றது.
9

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு " பாதீனியம் அகற்றலும் மைதான சிரமதானமும் செய்யும் நிகழ்வும்" 23.01.2023 அன்று காலை 7.00 மணியளவில் யா/ கதீஜா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இங்கு பரம்பியிருந்த பாதீனியம் சுகாதார முறைப்படி அகற்றப்பட்டு எரித்தழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மைதானத்தின் புற்கள் வெட்டியகற்றப்பட்டன. இதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , பெற்றோர்கள் சமுக மட்ட அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 20.01.2023 அன்று பி.ப 4.30 மணிக்கு ஒருங்கிணைந்த சமுக மேம்பாட்டு அமைப்பின் சுயதொழில் வழிகாட்டல் மற்றும் சமுக மேம்பாடு சம்பந்தமான நிர்வாகக்கூட்டம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கியூடெக் கரிதாஸ் இணைப்பாளர் திரு ஜோசேப் பாலா கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

4

Scroll To Top