வள்ளலார் அருட்ஜோதி மணி மன்றத்தின் அனுசரணையுடன் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நலிவடைந்த 55 குடும்பங்களிற்கு இன்று 18.08.2023 வெள்ளிக்கிழமை எமது பிரதேச செயலக வளாகத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

11

முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் செயற்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 முன்பள்ளிகளில் கல்விகற்கும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் எமது பிரதேச செயலாளரினால் இன்று 17.08.2023 வழங்கி வைக்கப்பட்டன.

3

பாடசாலை மற்றும் பல்கலைக் கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்கு வெள்ளைப் பிரம்புடன் சமூகத்தில் தன்னிச்சையாகவே பொது இடங்களில் நடந்து கொள்ளுவது பற்றிய தயார்படுத்தலாக நேற்றைய தினம் திருநெல்வேலி பொதுச்சந்தை ,திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் ,திருநெல்வேலி அம்மாச்சி பாரம்பரிய உணவகம்,யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பூட்சிற்றி ஆகிய இடங்களுக்கு சமூக சேவைத் திணைக்களம் மத்திய அரசின் திட்டமிடலுக்கமைய எமது யாழ்ப்பாண பிரதேச செயலக சமூகபராமரிப்புக் கிளையினால் சிறிய சுற்றுலா ஒழுங்குபடுத்தப்பட்டது.

13

யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வாக ஆண் பெண் வீர,வீராங்கணைகளுக்கான சதுரங்கப் போட்டிகள் இன்று 17.08.2023 எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி  தற்போது நடைபெற்று வருகின்றன .இப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்ட செயலக அணியுடன் பதினைந்து பிரதேச செயலக அணிகளும் பங்குபற்றி மிகவும் உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர்.

28

பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் விழிப்புணர்வற்ற மாணவர்களுக்கு வெள்ளைப் பிரம்புடன் நடப்பதற்குபயிற்சி வழங்கும் விழிப்புணர்வுச் செயற்திட்டம் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு வெள்ளைப்பிரம்புகள்,சீருடைகள் வழங்கப்பட்டன.

19

Scroll To Top