J/61 நெடுங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வசந்தபுரம் கிராமத்தின் விண்மீன் முன்பள்ளியில் கல்விகற்கும் சிறுவர்களுக்கான ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் பொருட்டு எமது பிரதேச செயலாளர் அவர்களால் பசும்பால் வழங்கும் நிகழ்வு இன்று 13.01.2023 காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது நாட்டின் 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 12.01.2023 காலை 10.00 மணிக்கு J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் சென் நீக்கிளஸ் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நலன் விரும்பி ஒருவரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரச சேவையில் மிகவும் நேர்மையாகப் பணியாற்றி மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும்,
அரசாங்க அலுவலர்களை கௌரவிக்கும் நோக்கில் transparency international sri lanka நிறுவனம் வருடாந்தம் நேர்மைக்கு மகுடம் எனும் விருதினை வழங்குகின்றது.
அந்த வகையில் 2022/2023 ஆண்டு சிறப்பாக செயலாற்றிய அரசாங்க அலுவலர்களை இனங்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
transparency international sri lanka நிறுவனம் பல கட்டங்களாக பல மதிப்பீடுகளை செய்து அதன் பின்பு ஆகச் சிறந்த 5 அரசாங்க அலுவலர்களை இவ் விருதுக்காக தெரிவு செய்கின்றது.
இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச அலுவலர்களாக இருத்தல் அவசியம் ஆகும்.
உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளரவிக்கும் நோக்கில்
transparency international sri lanka நிறுவனம் இந்த விருதினை வழங்குகின்றது.
விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அல்லது 0711295295/0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.
2023 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.








