C Quest நிறுவன உதவியுடன் SOND நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வினைத்திறனான அடுப்புக்களை வழங்கும் திட்டத்தினூடாக J/81 கிராம சேவகர் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு நகர்த்தக்கூடிய ஒரு குடும்பத்திற்கு 2 வீதம் வழங்கப்பட்டது.

எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருளாதார புத்தெழுச்சிகுழுவின் ஏற்பாட்டில் 09.01.2023 J/83 கிராம அலுவலர் பிரிவில் வில்லூன்றி வீரகத்தி முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சிவழங்கப்பட்டதுடன் பெற்றோர்களுக்கும் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு பொது சுகாதார மாதுவினால் நிகழ்த்தப்பட்டது.

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருளாதார புத்தெழுச்சிகுழுவின் ஏற்பாட்டில் 09.01.2023 J/83 கிராம அலுவலர் பிரிவில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நலன் விரும்பி ஒருவரால் பொங்கல் பானைகள் வழங்கப்பட்டது.






