எமது நாட்டின் 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 2023.01.19 அன்று J/88 கிராம அலுவலர் பிரிவில் நலன்விரும்பி ஒருவரால் மாற்றுவலுவுள்ள 16 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2023.01.20 J/78 அத்தியடி கிராம அலுவலர் பிரிவில் அத்தியடி பிள்ளையார் ஆலய முன்றலிலும் அத்தியடி அறநெறிக் கல்லூரியிலும் மரநடுகை நிகழ்வும் காய்கறி மரக்கன்று விநியோகமும் இடம்பெற்றது. இந் நிகழ்வுகளில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,கிராமமட்ட அமைப்புக்கள், பிரிவு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு இன்று 2023.01.19 J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய முன்றலில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட அமைப்புக்கள், பிரிவு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கார்மேல் முன்பள்ளியில் 16.01.2023 அன்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.இதில் சிறுவர்கள் மிக்க ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

எமது நாட்டின்75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு இன்று 2023.01.19 J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராமமட்ட அமைப்புகள், பிரிவு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






