வெசாக் வேலைத்திட்டத்தின் ஒரு செயற்பாடாக சென்.யோசப் வித்தியாலயத்திற்கு பிரதேச செயலகத்தினால் ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 04.05.2023 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார பிரிவால் வெசாக் வார்த்தின் இரண்டாம் நாள் மரநடுகை வேலைத்திட்டம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் 2023.05.03 ஆம் திகதி நடைபெற்றது. இவ் வேலைத்திட்டத்தில் பாதிரியார் ஸ்ரலின் இராசேந்திரம் அவர்களும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களான திரு.இ.யோன்சன்,திரு.எஸ்.ரூபகுமார்,திருமதி.லி.சுபேந்தினி,அ.ரஜிதா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 04.05.2023 வியாழக்கிழமை காலை 10.மணிக்கு ஓவியப்போட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.







