சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தி "அதிகரிக்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவு" இன்று முதல் கையளிப்பு!
நாட்டில் 28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல்,இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமைக்கமைய இன்று எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி கிழக்கு வங்கிச் சங்கத்தில் மக்களுக்கான கொடுப்பனவு யாழ்.மாவட்ட செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது வரையில் மூவாயிரத்து 500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, நான்காயிரத்து 500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும். மேலும் 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, 3,200 ரூபா கொடுப்பனவும், அதேவேளை ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, ஆயிரத்து 900 ரூபா கொடுப்பனவும் கிடைக்கும். குறித்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட பணிப்பாளர் சமுர்த்தி , மாவட்ட பணிப்பாளர் காணி, மாவட்ட சமுர்த்தி கணக்காளர்,
ஓருங்கிணைப்பு குழு தலைவரின் பிரதிநிதிகள், கடல் தொழில் அமைச்சரின் பிரதிநிதி,சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்திஉத்தியோகத்தர்கள்,சமுர்த்திப் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
SAM
Sam payment.jpg 15
Sam payment.jpg 13
 
 
J/67 திருநகர் கிராம அலுவலர் பிரிவிற்கான முதியோர் சங்க பொதுக் கூட்டம் 2022.02.11
மாலை 5.00 மணிக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் முதியோர் சங்கத்திற்கான புது அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
elders

J/80 பெரிய கடை கிராம அலுவலர் பிரிவில் 09.02.2022 புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு 'அழகிய சிறுவர் சமூகம்' உருவாக்குவதற்கான தெரிவுக் கூட்டம் இடம்பெற்றது.

alakija

alakija.jpg 2

alakija.jpg 1

 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரு மாத வேலைத்திட்டத்தின் கீழ் J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட சிறுவர்களிற்கான சிறுவர் கழகக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் 12.02.2022 சனிக்கிழமை பி.ப 12.30 மணிக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர் கலாசார உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் சிறுவர் மேம்பாட்டு குழு நிர்வாக உறுப்பினர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

86

862

 

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/72 சின்னக் கடை கிராம அலுவலர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினை உருவாக்குவதற்கான தெரிவுக் குழுக் கூட்டம் 08.02.2022 அன்று இடம்பெற்றது.கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமுர்த்திப் பயனாளிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

samurdhi samuthaja kuluk koodam

samurdhi samuthaja kuluk koodam.2

samurdhi samuthaja kuluk koodam.1

 

Scroll To Top