2024 ஆம் ஆண்டிற்கான எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான மெய்வலுனர் போட்டிகள் 01.05.2024 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் 13 பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த வீர,வீராங்கணைகள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
IMG 9690

யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச முதியோர் சங்கமும் இணைந்து நடாத்தும் பிரதேச முதியோர் கௌரவிப்பு விழா இன்று 30.04.2024 காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திரு.நாகலிங்கம் சுந்தரராசா ( தலைவர் ,யாழ்.பிரதேச முதியோர் சங்கம் ) தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதர்சன் அர்களும் சிறப்பு விருந்தினர்களாக செல்வி.தர்ஷினி உருத்திர கோடீஸ்வரன் (உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்),திருமதி.சோபிகா றோய் றொபின்சன் உதவி பிரதேச செயலாளர்,பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்) அவர்களும்,திரு.கந்தையா ஸ்ரீதரன் (கணக்காளர்,பிரதேச செயலகம்,யாழ்ப்பாணம்)அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.வரவேற்பு நடனம்,சிறப்பு நடனம்,முதியோர் பாடல்,குறு நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் அதி மூத்த பிரஜைகள் கௌரவிப்பு ,சிறந்த சமூக சேவையாளர்,சிறந்த கலைஞர்,சிறந்த தொழில் திறமையுடையவர், சிறந்த ஊடகவியலாளர் போன்றோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற மாகாண ,மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் க.பொ.த.உயர்தரம், புலமைப் பரிசில் பரீட்சையில் என்பனவற்றில் சித்தி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கபட்டன.

38

J/65 பாசையூர் மேற்கு , கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்க பொது கூட்டமும் நிர்வாக தெரிவும் நேற்று 24.04.2024 இடம் பெற்றது. நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்,கிராம அலுவலர் , சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
RDO 2
எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாற்றாற்றலுடையோர் வசந்த விழா இன்று 25.04.2023 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக திறந்த வெளி அரங்கில் எமது பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு.என்.எஸ்.ஆர்.சிவரூபன்( பிரதம கணக்காளர்,மாவட்ட செயலகம்) அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக திரு.செல்வ விநாயகம் அருளானந்தசிவம் (ஆசிரியர் கிளி/தம்பிராசா வித்தியாலயம்,ஸ்தாபகர் பரலைஸ் Nursing Home) அவர்களும் திரு.எஸ்.சந்திரகுமார் (தலைவர் தமிழ் விருட்சம் ,வவுனியா) அவர்களும்,செல்வி.விஜிதா நாகேந்திரம் (நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் விது நம்பிக்கை நிதியம் ,யாழ்ப்பாணம்) அவர்களும்,வைத்திய கலாநிதி ஜெ.கணேச மூர்த்தி (இயக்குநர் ஜெயப்பூர்,சுண்டுக்குளி )அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் வாழ்வக மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, சிவபூமி பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம்,யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் நாட்டார் பாடல்,ஒஸ்மானியா பாடசாலை மாணவர்களின் (கஸீதா) நடனம்,Tower நாடகபாடசாலை மாணவர்களின் ஈழத்துக்கலை மலரச்சி நாடகம், நவீல்ட் பாடசாலை மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கோலாட்டம், யாழ்.நாதம்ஸ் இசைக்குழுவின் வாத்திய விருந்து போன்ற பலவேறு கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. இந் நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
viber image 2024 04 25 16 13 09 727
Scroll To Top