டெங்கு தொடர்பான விசேட வேலைத்திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தில் வேகமாகப் பரவும் டெங்கு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கள உத்தியோகத்தர்கள் களப்பணிகளில் 03.01.2023 இன்று ஈடுபட்டனர்.

வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற தொனிப் பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாட்டை ஆரம்பிக்கும் முதல் நாள் இன்று காலை 9.00 மணிக்கு எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் தேசியக் கொடியேற்றல்,தேசிய கீதம் பாடுதல் ,மௌன அஞ்சலி செலுத்தல்,அரச சேவை உறுதியுரை எடுத்தல் என்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்களின் கீழ் வறுமை ஒழிப்பு ,வேலையின்மையைக் குறைத்தல் ,உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் அந்நியச் செலாவணி உழைப்பு அதிகரித்தல் என்பவற்றுக்காக அரச சேவையிலுள்ள அனைவரினதும் செயலூக்கமான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தி பொது மக்களுக்கான சேவை வழங்கலின் வினைத்திறன் உறுதிப்படுத்தப்படுகின்ற அத்தியாவசியமான மறுசீரமைப்புகளை அரச சேவையில் அறிமுகப்படுத்தி ,அரச செலவுகளைக் குறைத்தல் மற்றும் அரச வருமானத்தை அதிகரித்தலின் மீது நீங்கள் அனைவரும் முன்னரைவிடக் கவனம் செலுத்துதல் என்ற சத்தியப்பிரமாண வலியுறுத்தலுடன் எமது இவ்வருடத்திற்கான கடமைகள் ஆரம்பித்தன.\


நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 10 வருடகாலமாக பதியப்படாத 13 பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு செய்யப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் பால்நிலை வன்முறையற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலைப் பேணல் என்னும் தலைப்பில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு இன்று காலை 10.00 -12.00 மணிவரை சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர் திருமதி.ம.கோசலை அவர்களினால் விழிப்புணர்வு கருத்தமர்வொன்று நடாத்தப்பட்டது.

2023 டிசம்பர்21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 டிசம்பர்21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்தென் மாகாணங்களில்சிலஇடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.






