அண்மையில் வெளியாகிய அரச அலுவலகங்களுக்கிடையிலான 2018,2019 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்தித்திறன் போட்டியில் எமது அலுவலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.இத் தரப்படுத்தலை பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நேற்றைய தினம் எமது பிரதேச செயலாளரால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் மிகவும் குறைந்தளவு விடுமுறையைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரையும் இச் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.



பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியமும் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக ஓய்வூதியர் சங்கமும் இணைந்து 22.01.20222 சனிக்கிழமை அன்று எமது யாழ்பாண பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.திரு.லிகோ.கிளெமென்ற் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு. என் சிவரஞ்சன் (ப.சே.ஓ.நம்பிக்கை நிதியம் யாழ் மாவட்டம் )எமது கணக்காளர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
















