சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்தக் கலந்துரையாடல் நேற்று 09.02.2022 புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு எமது உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சிறு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கோட்டக்கல்வி அலுவலர்,சிறுவர் மற்றும் பெண்களுக்கான பொலீஸ் உத்தியோகத்தர் ,குடும்ப நல மாது,பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள்,நிர்வாகக் கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இங்கு பாடசாலை மாணவர்களின் இடை விலகல்கள்,ஒழுங்கற்ற வரவீனங்கள்,சட்ட உதவிகள்,குடும்பப் பிரச்சனைகள் ,உளவளத்துணை சார் விடயங்கள் என்ற பல விடயங்கள் பற்றி ஆரயப்பட்டன.







இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் சிரமதான நிகழ்வுகளும்,மர நடுகைப் பணிகளும் கிராம மட்ட உத்தியோகத்தர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு இடம்பெற்று வருகின்றது.











