J/85 கிராம அலுவலர் பிரிவிலுள்ள "நித்திய ஒளி" முன்பள்ளி மாணவர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்குரிய விளையாட்டுப் போட்டி நிகழ்வு 27.03.2022 நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் கடந்த வருடங்களில் இப் போட்டிகள் இடம்பெறாத சூழலில் இவ்வருடம் சிறுவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.


2022 ஆம் ஆண்டிற்குரிய எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 26.03.2022 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபற்று வருகின்றன.இதுவரை மென்பந்து,கரப்பந்து,வலைப்பந்து ஆகிய போட்டிகள் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் இவ் விளையாட்டுகளில் களகங்களின் வீர வீராங்கணைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிருமாத வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட J/62 கிராம அலுவலர் பிரிவில் உள்ள அழகிய சிறுவர் சமுகத்தின் சிறார்களுக்கு ஓவியம் ,சிறுவர் இலக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் 22.03.2022 ஆம் திகதி செயலமர்வு நடாத்தப்பட்ட து இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.கிருஸ்ணகுமார் அவர்களும் வளவாளர்களாக அறிந்திரன் ஆசிரியர் திரு.க.சர்வானந்தா அவர்களும் செல்விகோ. தர்சிகா அவர்களும் திருமதி.கவ்வியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.










