எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் எமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பரவலாக பல்வேறு சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.தற்போது மழைகாலம் என்பதால் டெங்கு நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வுடன் கூடியதாகவே இப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.இவற்றில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,பொது சுகாதாரபரிசோதகர், சுகாதார உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புகளினர் உட்பட பலர் பங்கெடுத்திருந்தனர்.

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோருக்காக நடாத்தப்படுகின்ற கட்டுரை,கவிதை,ஓவியபோட்டிகளுக்கான ஆக்கங்கள் எமக்கு கிடைத்துள்ளன.மேலும் ஆர்வமுடையவர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முடிவுத் திகதி:-20.11.2022

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் 17.11.2022 முதல் நடைமுறைக்கு வரும் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட கட்டண விபரங்கள்......

ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!



உலக நீரிழிவு தினத்தைத்தையொட்டி நேற்றைய தினம் 14.11.2022 எமது அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கான வைத்தியப் பரிசோதனை ஒன்று யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் குழுவினரால் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.அவர்களின் உயரம்,நிறை,இரத்த அழுத்த விகிதம்,இரத்தத்தில் குளுக்கோசின் அளவு உள்ளடங்கலான உடற்திணிவுச் சுட்டி எனபன பரிசோதிக்கப்பட்டு நீரிழிவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ மேற்கொள்ள வேண்டிய உணவுப்பழக்கவழக்கங்கள் , உடற்பயிற்சி, உடல் நிறையைக் குறைத்தல் ,அன்றாடம் அறிந்த விடயங்களை நடைமுறைப்படுத்தும் விதம் போன்ற விடயங்கள் பற்றி ஆலோசனைகளும் அவர்களால் வழங்கப்பட்டன.






