"நங்வமு லங்கா" திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் ,தெரிவு செய்யப்பட்ட ஐந்து சுயதொழில் முயற்சியாளர்களுக்குரிய உபகரணங்கள் 23.11.2022 புதன்கிழமை தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினரின் (NEDA) ஒழுங்குபடுத்துதலின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 சிறுவர் முன்பள்ளிகளுக்கு உலக வங்கியின் அனுசரணையுடன் 22.11.2022 அன்று குடிநீர் சுத்திகரிக்கும் Water Filterகள் வழங்கி வைக்கப்பட்டன.



J/61 நெடுங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மத்திய வங்கியின் அனுசரணையுடன் வசந்தபுரம் முன்பள்ளியில் கல்விபயிலும் மாணவர்களுக்கு கற்றலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் திண்மக்கழிவகற்றலை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பாக மாநகரசபையின் விடயத்திற்கு பொறுப்பான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரால் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.






