வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 23.06.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் மங்கல இசையுடன் ஆரம்பமாகியது.இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.உயர்திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி.இராஜமல்லிகை சிவசுந்தரசர்மா(பிரதிப் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,வடக்கு மாகாணம் ,கௌரவ விருந்தினராக கலாபூஷணம்.குருசுமுத்து இராயப்பு அவர்களும் கலந்து கொண்டனர்.கலை நிகழ்வுகள் ,நூல் வெளியீடு,கலைஞர் கௌரவிப்பு,பரிசில்கள் வழங்கல் என்ற சிறப்பம்சங்களுடன் விழா நிறைவு பெற்றது.இந் நிகழ்வில் பெருமளவான கலைஞர்கள்,பாடசாலை மாணவர்கள்,கலை மன்ற மாணர்கள்,இளம் கலைஞர்கள்,பாசெய்யூர் கலையக கலைஞர்கள்,கலாசாரப் பேரவை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.













