சமுர்த்தி "சமுதாய அடிப்படை வங்கி சவால் கிண்ணம்" மென்பந்து கிரிக்கெட் போட்டி யாழ்நகர் கிழக்கு வங்கி மற்றும் யாழ்நகர் மேற்கு வங்கி அணிகளுக்கிடையில் 2023.07.06 நேற்றைய தினம் மாலை 3.00 மணிக்கு ஈச்சமோட்டை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலாளர்,சமுர்த்தி முகாமையாளர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.இப் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்நகர் கிழக்கு வங்கி அணியினர் மாவட்டமட்ட போட்டிக்கு தெரிவாகியாகினர். வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களை எமது பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.

நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளபயனாளிகளின் விபரங்கள் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டதற்கமைய
பயனாளிகளின் பெயர் விபரங்கள் சகல கிராம அலுவலர் அலுவலகங்களிலும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தும் தமது பெயர் விபரங்கள் பட்டியலில் இல்லாதவர்களும், பெயர் விபரம் வெளியிடப்பட்டிருந்தபோதும் தமக்குரிய கொடுப்பனவுத் தொகை தொடர்பான மேன்முறையீட்டைத் தெரிவிப்பவர்களும் தொடர்ந்து ஏழாவது நாளாக எமது பிரதேச செயலகத்திற்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர்.அவர்களுக்கான பணிகளில் எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் எட்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.எதிர்வரும் 10.07.2023 வரை பொதுமக்களாகிய நீங்கள்உங்களது மேன்முறையீடுகளை எமது அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

நலன்புரி நன்மைகள் சபையின் உதவியானது தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு பொதுமக்கள் ஆகிய நீங்கள் எதுவித தயக்கமும் காட்டத்தேவையில்லை.
ஆட்சேபனை தெரிவிக்கும் நபரின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிடாமல் முறைப்பாடுகளினை வழங்க முடியும்.
முறைபாட்டு படிவத்தின் ஆட்சேபனை பகுதியில் யாருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கின்றாரோ அவரின் QR எண் , பெயர், மற்றும் எந்த விடயத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றார் ( வருமானம், வெளிநாட்டு உதவி, வாகனம், வேறு உடைமைகள் ) போன்ற விடயங்களை குறிப்பிட்டு நீங்கள்பிரதேச செயலகத்தில் படிவங்களை ஒப்படைக்கலாம்.
QR இலக்கம் மற்றும் அவ்விலக்கத்திற்குரிய பயனாளியின் பெயர் கட்டாயம் இடப்படல் வேண்டும். (கிராம சேவையாளர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் QR இலக்கம் மற்றும் பெயர் உள்ளது ) அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட படிவங்கள் தனியானதொரு இணையத்தள முகவரியினூடாக பதிவுசெய்யப்படும்.
எனவே பொதுமக்களாகிய நீங்கள் தயக்கமின்றி ஆட்சேபனைகளை எதிர்வரும் 10.07.2023 வரை தெரிவிக்கமுடியும்.








