சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்டப் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சமூக பாதுகாப்புச் சபையின் காசோலை 24.07.2023 நேற்று எமது பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

SSO

பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் 17.07.2023 அன்று பி.ப 3.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இதில் உதவிப் பிரதேச செயலாளர்,பாடசாலை அதிபர்கள்,SOND நிறுவனத்தின் பிரதிநிதி,SOS நிறுவனத்தின் பிரதிநிதி ,குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள்,சிறுவர் பகுதி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

3

முன்பிள்ளை அபிவிருத்திச் செயற்திட்டத்தினூடாக எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆ.வே மரியா முன்பள்ளி ,குருநகர் சனசமூக நிலைய முன்பள்ளி,Tiny Toy முன்பள்ளி ஆகிய மூன்று முன்பள்ளிப் பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களுக்குரிய கதிரை, மேசை, அலுமாரி, சிறுவர்களுக்கான கதிரை,மேசை,முதலுதவிப் பெட்டி என்பன எமது செயலக முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பிரதேச செயலாளரால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

early child.2

"அஸ்வெஸ்ம" நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்க வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் ,வங்கிக் கணக்கு இல்லாத மற்றும் ஏற்கனவே உள்ள கணக்கின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்தாத J/61-J/68 வரையான கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இன்று 25.07.2023 காலை 9.00 மணிமுதல் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தமக்கான வங்கிக் கணக்கினை ஆரம்பித்தல், கணக்கின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்தல் செயற்பாட்டிற்காக வருகைதந்துள்ளனர்.இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் பணியாற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் இவர்களுக்கான வங்கிக்கணக்கை ஆரம்ப வைப்புப் பணம் செலுத்தாமல் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதுடன் அவர்கள் எமது அலுவலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து தற்போது இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4

யாழ் மாவட்ட சமுர்த்தித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட "சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி வங்கிக்கான சவால் கிண்ணம் 2023" இற்கான கிரிக்கற் சுற்றுப்போட்டியில் எமது யாழ் பிரதேச செயலக உத்தியோகத்தர் அணி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப்பெற்று வெற்றிக்கேடயத்தினையும், நாற்பதாயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது.
20.07.2023 வியாழக்கிழமை கோப்பாய் G. P.S மைதானத்தில் யாழ்மாவட்ட சமுர்த்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் உயர்திரு அ. சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இப் பரிசுகளை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் ஆட்ட நாயகன் விருது, சிறந்த துடுப்பாட்டத்திற்கான விருது , மற்றும் சிறந்த களத்தடுப்புக்கான விருது என மூன்று தர விருதுகளையும் எமது செயலக சமுர்த்தி உத்தியோகத்தரான இ. கவிகரன் பெற்றுக்கொன்டார். இப்போட்டியின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை எமது செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் ஜி. அமல்ராஜ் பெற்றுக்கொண்டார். இவ் வெற்றியைப் பெற்றுத்தந்த அனைத்து வீரர்களுக்கும் எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
1
Scroll To Top