எமது பிரதேச செயலகத்தில் 20.01.2022 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவையானது நடைபெற்று வருகின்றது. தேவை இருப்பவர்கள் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டு தமது நீதிக்கான வழிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



இன்று எமது யாழ்ப்பாண பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.இவ் விழாவில் இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசக் கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள் .



பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள "நித்திய ஒளி" முன்பள்ளிக்கான கதிரைகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.










