தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2020 போட்டியில் அரச பிரிவின் கீழ் பிரதேச செயலகங்களுக்கிடையில் போட்டியிட்ட எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்காக இன்று 15.12.2022 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நாட்டின் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டார்கள். இவ் விருதினைப் பெறுவதற்காக அயராது பணியாற்றிய அனைத்து பிரதேச சயலக குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

product.jpg 5

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும்.
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார்.
ஓய்வூதியர்களின் உயிர்வாழ்வுச் சான்றிதழை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கிராம அதிகாரிகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியர்களின் கையொப்பமிடப்பட்ட படிவத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாரிடம் ஒப்படைப்பது அவசியமாகும். அந்தத் தகவலின்படி, ஓய்வூதிய அதிகாரிகள் தரவுக் கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அதுவரை உறுதிப்படுத்தப்படாத ஓய்வூதியர்களின் தரவுகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம அலுவலர்கள் ஆவணங்களை பூர்த்தி செய்து மாவட்ட செயலாளரிடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் மேலும் தெரிவித்தார்.
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு குறித்த சுற்றறிக்கை:
att
 

நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தில் தரவுகளைத் தரவுத் தளத்தில் பதிவேற்றும் வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்ட எண்ணீட்டு உத்தியோகத்தர்களுக்கான(Enumerators) பயிற்சி நெறியொன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.12.2022 காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை இடம்பெற்றது.இப் பயிற்சி நெறியில் ASWASUMA Mobile App தொடர்பான தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகளைப் பெற்ற தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ,நலன்புரி நன்மைகள் சபையின் வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான விளக்கங்களுடன் தரவேற்றம் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

awarness. tri 3

வட மாகாணத்தில் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும். எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
யாழ்ப்பாணம் 0212222609
திருநெல்வேலி,கோண்டாவில் 0212222498
சுண்ணாகம் 0212240301
சாவகச்சேரி 0212270040
பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855
வேலணை0212211525
காங்கேசன்துறை 0212245400
att
Scroll To Top