பிரதேச செயலக சேவை கோப்புகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
Slideshow CK
அரசு சேவை மையங்கள்
முகப்பு
முன்பள்ளிக்கான கதிரைகள் வழங்கல்
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள "நித்திய ஒளி" முன்பள்ளிக்கான கதிரைகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.


பெண்களுக்கான தையல் பயிற்சி
மத்திய வங்கியின் அனுசரணையுடன் தொழிற் துறைத் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளரினால் J/81 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தையல் பயிற்சிபெற்ற பெண்களுக்கான 15 தையல் இயந்திரம் திருத்தும் பயிற்சி பட்டறை சிங்கர் காட்சி அறையில் இடம் பெற்றது.நாட்கள் இடம் பெற்றது.இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டு பயனாளிகள் பயன் பெற்றனர்.


உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு



புதிய ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்.....
எமது யாழ்ப்பான பிரதேச செயலகத்தில் இரண்டாயிரத்து இருபத்தியிரண்டாம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணத்துடன் தமது கடமைகளை ஆரம்பித்தனர்.இன்றுடன் ஆரம்பிக்கும் புது வருடத்தில் ஒழுக்கமான சட்டத்தை மதிக்கின்ற ,பண்பாடுகளைக் கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் ,நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் பௌதிக வள அபிவிருத்தியின் ஊடாக மக்கள் மைய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வளம்பெற்ற மனித வளங்களை வழிநடாத்தும் தூய அரச நிர்வாகத்தின் ஒரு பங்காளராக பணியாற்றி மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் உச்ச அளவு அர்ப்பணிப்புடன் நேர்மையுடன், மக்களுக்குச் சார்பாக நிறைவேற்ற திடசங்கற்பம் எடுப்பதாகவும் அவர்களின் உறுதியுரை அமைந்திருந்தது.பிரதேச செயலாளர் 2021 ஆம் ஆண்டில் ஆசாதரண சூழலில் மக்களுக்கான பல சேவைகளில் எமது பிரதேச செயலகம் ஓய்வின்றி செயற்பட்டதையும் அதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு நன்றியையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டார்.










