எமது யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இன்று 08.01.2022 சனிக்கிழமை எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அலுவலக உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளும்,பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் தொடர்ச்சியாக அனைவரையும் மகிழ்ச்சியூட்டும் வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததுடன்
உத்தியோகத்தர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் இடம்பெற்றன.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் கடந்த ஒருவருடமாக பட்டதாரிப் பயிலுனர்களாக கடமையாற்றி எதிர்வரும் சில தினங்களில் நிரந்தர நியமனம் பெற்று பல அரச நிறுவனங்களுக்கும் செல்லவுள்ள நிலையில் பயிலுனர்கள் தமது ஞாபகார்த்தமாக அலுவலக பொது நிகழ்வுகளுக்கான அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








