தற்போதைய மழைகாலச் சூழலில் பரவிவரும் டெங்கு நோய்த்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் பரவலாக டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. (J/77மருதடி,J/63 கொழும்புத்துறை மேற்கு,J/86 புதிய சோனகதெரு தெற்கு) இக் கூட்டத்தில் பிரிவின் மாநகர சபை உறுப்பினர் ,பொதுச்சுகாதார பரிசோதகர், கிராம அலுவலர், டெங்கு குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இங்கு பொதுவான சுகாதார பிரச்சனைகள் மற்றும் நோயின் வகையை பிரித்தறியும் வழிமுறை , திண்மக்கழிவகற்றல், டெங்கு பரவாமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றன பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றன.








