எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாற்றாற்றலுடையோர் வசந்த விழா இன்று 25.04.2023 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக திறந்த வெளி அரங்கில் எமது பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு.என்.எஸ்.ஆர்.சிவரூபன்( பிரதம கணக்காளர்,மாவட்ட செயலகம்) அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக திரு.செல்வ விநாயகம் அருளானந்தசிவம் (ஆசிரியர் கிளி/தம்பிராசா வித்தியாலயம்,ஸ்தாபகர் பரலைஸ் Nursing Home) அவர்களும் திரு.எஸ்.சந்திரகுமார் (தலைவர் தமிழ் விருட்சம் ,வவுனியா) அவர்களும்,செல்வி.விஜிதா நாகேந்திரம் (நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் விது நம்பிக்கை நிதியம் ,யாழ்ப்பாணம்) அவர்களும்,வைத்திய கலாநிதி ஜெ.கணேச மூர்த்தி (இயக்குநர் ஜெயப்பூர்,சுண்டுக்குளி )அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் வாழ்வக மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, சிவபூமி பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம்,யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் நாட்டார் பாடல்,ஒஸ்மானியா பாடசாலை மாணவர்களின் (கஸீதா) நடனம்,Tower நாடகபாடசாலை மாணவர்களின் ஈழத்துக்கலை மலரச்சி நாடகம், நவீல்ட் பாடசாலை மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கோலாட்டம், யாழ்.நாதம்ஸ் இசைக்குழுவின் வாத்திய விருந்து போன்ற பலவேறு கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. இந் நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.






