2024 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் நடாத்த்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு நேற்று 16.03.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒஸ்மானியக்கல்லூரியில் இடம்பெற்றது.திரு.ம.பற்றிக் டிறஞ்சன் (செயலாளர்,கல்வி அமைச்சு,வடக்கு மாகாணம்) பிரதம விருந்தினராக கௌரவ பி.எஸ்.எம்.சாள்ஸ் (ஆளுநர்,வடக்கு மாகாணம்) சிறப்பு விருந்தினராக திரு.இ.இளங்கோவன் (பிரதம செயலாளர்,வடக்கு மாகாணம்)அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இந் நிகழ்வில் யாழ்ப்பாண பள்ளி வாசல்களின் நிர்வாகிகள்,பள்ளி வாசல்களில் கடமை புரியும் மௌலவிமார்கள்,உலாமாக்கள்,யாழ் முஸ்லிம்சிவில் சமூகப்பிரதிநிதிகள், பெண்கள்,இளைஞர்கள், யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.






