இன்று முதல் எரிசக்தி அமைச்சால் எரிபொருள் விநியோகத்திற்காக பின்பற்றப்படவுள்ள நடைமுறைகள்..... தகவலுக்காக
இதுவரை எரிபொருள் விநியோகத்திற்காக பின்பற்றப்பட்ட வாகனத்தின் இறுதி இலக்க நடைமுறைகள் இல்லாது தேசிய எரிபொருள் அனுமதி முறையின் (QR Code) மூலம் மட்டுமே எரிபொருள் விநியோகம் நடைபெறும்.
தேசிய எரிபொருள் அனுமதி முறையினை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் (QR Code) க்கு எரிபொருள் வழங்கப்படும்.
தமது வாகனத்தின் வரி அனுமதிப் பத்திர இலக்கத்தின் மூலம் வாகன பாவனையாளர்கள் தமது வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
முச் சக்கர வண்டி உரிமையாளர்கள் தமக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து தமக்குரிய ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தினை மாத்திரம் தெரிவு செய்து அங்கு தமக்குரிய வாராந்த எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தோட்டக் கருவிகள்,இயந்திரங்கள்,ஜெனரேட்டர்கள், மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தமக்குரிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பல வாகனங்களை உடைய வணிக நிறுவனங்கள் தங்களுடைய வியாபார பதிவு எண்ணுடன் தமக்குரிய பதிவினை மேற்கொண்டு எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்களது பயணப் பாதை மற்றும் தூரம் என்பவற்றை கருத்தில் கொண்டு இ.போ.ச டிப்போக்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அவர்கள் கோரும் அளவு எரிபொருளை வழங்க வேண்டும்.
இ.போ.ச டிப்போக்கள் பாடசாலை சேவை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், தொழில்கள், சுற்றுலாத் துறை, அம்புலன்ஸ்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளின் டீசல் எரிபொருள் தேவைகளை எளிதாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்.
Untitled 147
 
Scroll To Top