பொது மக்களுக்கான அறிவுறுத்தல்.........
எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்வதற்காக தாங்கள் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்..........
01. குடும்ப அட்டை
02. வாகனப் புத்தகம்
03. இவ்வருட வாகன வரி அனுமதிப் பத்திரம்( Tax)
04. இவ்வருடத்துக்கான வாகனக் காப்புறுதி அனுமதிப் பத்திரம்(Insurance)
05. தேசிய அடையாள அட்டை
எரிபொருள் அட்டை வழங்கப்படுவதற்கான நிபந்தனைகள்!!!
01. வாகனம் பாவனையில் இருத்தல் வேண்டும்.
02. ஒரு வாகனத்திற்கு ஒரு அட்டை மட்டும் வழங்கப்படும்.
03. வாகன உரிமையாளர் பெயரில் மட்டும் அட்டை வழங்கப்படும்.
04.பெயர் மாற்றங்களை உடன் செய்து கொள்ளவும்.
05. யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசாங்க நிறுவனங்கள் , கூட்டுதாபனங்கள், திணைக்களங்கள், தனியார் வங்கிகள், போன்றவர்களுக்கு அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களால் எரிபொருள் அட்டை வழங்கப்படும்.
06. மேற்குறிப்பிட்ட பகுதியினர் தவிர்ந்த அனைத்து பொது மக்களுக்கும் கிராம அலுவலர் பிரிவுகளில் வழங்கப்படும்.
07. உரிய நபர் நேரில் வருகை தர வேண்டும்.
08. எரிபொருள் அட்டை தொலைந்தால் மீண்டும் வழங்கப்பட மாட்டாது.
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்,
யாழ்ப்பாணம்.







