இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்றைய தினம் 30.05.2022 யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நிவாரணப் பொதியை சம்பிரதாயபூர்வமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கையளித்தார்.தொடர்ந்து நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உலருணர்வைப் பெறத் தகுதியுடைய பொதுமக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை பிரதேச செயலாளரும், கிராம மட்ட உத்தியோகத்தர்களும் வழங்கிவைத்தனர்.






