எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேச மட்ட சகவாழ்வுச் சங்கம் நேற்றைய தினம் உருவாக்கப்பட்டது. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் உருவாக்கப்பட்ட இச் சங்கத்திற்காக தலைவர்,செயலாளர்,பொருளாளர் உட்பட ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இக் கூட்டத்தில் பொலீஸ் அமைப்பினர்,சமூக மட்ட குழுக்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







