76வது சுதந்திர தினம்......................
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று 04.02.2024 எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் காலை 8.27 மணிக்கு தேசிய கொடியேற்றுதலுடன் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டு ,நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவரையும் நினைவு கூருதலாக அமைந்திருந்தது. தொடர்ந்து மதங்களின் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தனது சுதந்திர தின உரையில் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததுடன் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து J/ 76 சுண்டிக்குளி கிராம அலுவலர் பிரிவில் சுதந்திரதினத்தையொட்டி மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
76வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை எமது அலுவலகம் சாா்பாக உங்களுக்குத் தொிவித்துக் கொள்கின்றோம்.







