வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற தொனிப் பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாட்டை ஆரம்பிக்கும் முதல் நாள் இன்று காலை 9.00 மணிக்கு எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் தேசியக் கொடியேற்றல்,தேசிய கீதம் பாடுதல் ,மௌன அஞ்சலி செலுத்தல்,அரச சேவை உறுதியுரை எடுத்தல் என்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்களின் கீழ் வறுமை ஒழிப்பு ,வேலையின்மையைக் குறைத்தல் ,உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் அந்நியச் செலாவணி உழைப்பு அதிகரித்தல் என்பவற்றுக்காக அரச சேவையிலுள்ள  அனைவரினதும் செயலூக்கமான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தி பொது மக்களுக்கான சேவை  வழங்கலின் வினைத்திறன் உறுதிப்படுத்தப்படுகின்ற அத்தியாவசியமான மறுசீரமைப்புகளை அரச சேவையில் அறிமுகப்படுத்தி ,அரச செலவுகளைக் குறைத்தல்  மற்றும் அரச வருமானத்தை அதிகரித்தலின் மீது நீங்கள் அனைவரும் முன்னரைவிடக் கவனம் செலுத்துதல் என்ற சத்தியப்பிரமாண வலியுறுத்தலுடன்  எமது இவ்வருடத்திற்கான கடமைகள் ஆரம்பித்தன.\

12

4

Scroll To Top