வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணிவரை வடமாகாணசபை வளாகம், கைதடியில் நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
1. வாசித்தலில், எழுதுதலில், விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப் பரீட்சையும் மருத்துவச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளலும்.
2. சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளல்.
3. தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஒமினிபஸ் ஆக மாற்றம் செய்தல்
4. வாகன பதிவுப் புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
5. வாகன இலக்கத்தகடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள்.
6. வாகன உடமை மாற்ற விண்ணப்பங்கள் கையேற்றல்.
7. 2014/2015ம் ஆண்டு செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாகனங்களின் நிபந்தனைகளை நீக்குதல்.
8. வாகன நிறைசான்றிதழ் பெற்றுக் கொள்ளல்.
9. இதுவரை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு (RMB)தீர்க்கப்படாத நிலுவைகள்
10. வாகன வருமானவரி தொடர்பானவை.
குறிப்பு: வாசித்தலில், எழுதுதலில், விசேட தேவையுடையோருக்கான படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த படிவத்தினை விசேட தேவையுடையோருக்கு வழங்கி பூரணப்படுத்தி 14.10.2022 க்கு முன்னர் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்புதல் வேண்டும்.
 
moter tr
Scroll To Top