நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று register என்பதை கிளிக் செய்து உங்களுடைய சரியான விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய விபரங்களை உறுதிப்படுத்த உங்களுடைய தொலைபேசி இலக்க
உறுதிப்படுத்தப்படும்.(OTP Code)
உறுதிப்படுத்தப்படும்.(OTP Code)உங்கள் பதிவு வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பின் Logout என்பதை கிளிக் செய்து வெளியேற முடியும்.
மீண்டும் உங்கள் விபரங்களை பார்வையிட Login என்பதை கிளிக் செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்து செய்து பார்வையிட முடியும்.
ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் பதிவு செய்யப்படும்.
வாகன Chassis இலக்கம் மற்றும் ஏனைய விபரங்களை உறுதிப்படுத்த QR இலக்கம் ஒன்று ஒதுக்கப்படும்.
வாகனத்தின் கடைசி இரண்டு இலக்கங்களைப் பயன்படுத்தி வாரத்தின் இரண்டு நாட்கள் எரிபொருள் பெற்றுக் கொள்ள ஒதுக்கப்படும்.
அதற்கமைய,
01)வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
02)ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள்.
03)வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும்.
04)வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம்
உங்களுடைய சரியான விபரங்களை பதிவு செய்த பின்பு " Registration Successful" என திரையில் தோன்றும்.
அதில் உங்களுக்குரிய QR இலக்கம் மற்றும் வாராந்த ஒதுக்கீடு மற்றும் மிகுதி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
Note:-நீங்கள் உள்ளீடு செய்த வாகன இலக்கமும் அடிச் சட்ட இலக்கமும்(Chassis) சரியானது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பே பதிவு செய்ய அனுமதிக்கும்.
தவறான விபரங்களை உள்ளீடு செய்தால் பதிவு செய்ய அனுமதிக்காது.
தயவு செய்து உங்களது மோட்டார் வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் உள்ளது போன்று சரியான விபரங்களை உள்ளீடு செய்யுங்கள்.
Note:-உங்களுடைய எரிபொருள் மிகுதியை அறிந்து கொள்ள FUEL BAL இடைவெளி உங்கள் வாகன இலக்கத்தை ரைப் செய்து 0766220000 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.
உதாரணம் உங்கள் வாகன இலக்கம் XH 3000 எனின் FUEL BAL XH 3000 என ரைப் செய்து 0766220000 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.





